காத்தான்குடி புராதன நூதனசாலை பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டுள்ளது

Main image
Image

மட்டக்களப்பு காத்தான்குடியில் அமைந்துள்ள புராதன நூதனசாலையானது பொதுமக்கள் பார்வைக்காக  மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

விசேட துஆ பிராத்தனை இடம்பெற்று குறித்த நூதனசாலையானது மக்கள் பார்வையிடுவதற்காக உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டுள்ளதுடன் முதலாவது பற்றுச்சீட்டினை காத்தான்குடி நகரசபை தவிசாளர் பெற்று பார்வையிட்டார். 

காத்தான்குடி நகரசபையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் நகரசபை தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர், நகரசபை உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இலங்கை முஸ்லீம்களின் வாழ்க்கை வரலாற்றினை கூறுகின்ற நூதனசாலையாக கடந்த 2014 ஆம் ஆண்டு நிறுவப்பட்டு உத்தியோகபூர்வமாக தொல்லியல் திணைக்களத்தின் கீழ் தொடர்ச்சியாக இயங்கி வந்துள்ளது. இந்தநிலையில் கடந்த ஆட்சி மாற்றம் மற்றும் கொரோணா சூழ்நிலை காரணமாக மூடப்பட்டிருந்தது.

அத்தோடு சில நிர்வாக சிக்கல்களை சீர்செய்து தற்போது காத்தான்குடி நகரசபை முற்றுமுழுதாக பாரமெடுத்து நூதனசாலையினை மக்கள் பார்வையிடுவதற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளதுடன் நோன்பு மற்றும் ஹஜ்ஜி போன்ற விசேட நாட்களை தவிர ஏனைய அனைத்து நாட்களிலும் காலை 9 மணி தொடக்கம் மாலை 5 மணி வரை பொதுமக்கள் பார்வையிட முடியும் எனவும் காத்தான்குடி நகரசபை தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

Main image

மண்முனைப்பற்று பிரதேசத்தின் மண்முனை கிராம சேவகர் பிரிவில் மண்முனை பாலத்தி அருகில் மீன் சந்தைக்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.

Main image

கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பன்சேனை பிரதேசத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தையான மகிழடித்தீவைச் சேர்ந்த சோமசுந்தரம் உதயகுமார் வயது (46) என்

Main image

ஒமிக்ரோன் கொரோனா திரிபு இலங்கையில் கண்டறியப்பட்டது.

Main image

நாடளாவிய ரீதியில்  உடன் அமுலுக்கு வரும் வகையில் எரிவாயு சிலிண்டர் விநியோகம்  இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

 

Main image

மட்டக்களப்பு நகர்ப்பகுதியில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றத்தவறிய பிரபலமான மூன்று உணவகங்கள் உட்பட 7 உணவகங்களை தலா 10 ஆயிரம் ரூபா வீதம் 70 ஆயிரம் ரூ

Main image

கோறளைப்பற்று வடக்கு, வாகரைப் பிரதேச செயலகத்திற்கான புதிய பிரதேச செயலாளராக பொறியியலாளர் ஜீ.அருணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

Main image

மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு 5 டிப்ஸ்..!!

 

1. உங்கள் வாழ்க்கையை நீங்கள் வாழுங்கள்.. அடுத்தவர் வாழ்க்கையை அல்ல..

Main image

எல்.பி எரிவாயு வெடிப்புகள் அல்லது அது தொடர்பான சிக்கல்கள் ஏற்பட்டால், நுகர்வோர் விற்பனை முகவர் அல்லது அருகிலுள்ள பொலிஸ் நிலையம் அல்லது 0115811927 –