நடிகர் புனித் ராஜ்குமார் நடத்திய சக்திதாமா இல்ல குழந்தைகளின் கல்வி செலவை ஏற்பதாக நடிகர் விஷால் அறிவித்துள்ளார்!

Main image
Image

நடிகர் புனித் ராஜ்குமார் நடத்திய மைசூர் சக்திதாமா இல்ல குழந்தைகளின் சகல கல்வி செலவையும் ஏற்பதாக நடிகர் விஷால் அறிவித்துள்ளார்.

 மேலும் நடிகர் விஷால் கூறுகையில் பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் சமீபத்தில் மாரடைப்பால் காலமானார். நடிகர் புனித் ராஜ்குமாரின் இறப்பு செய்தியை என்னால் ஏற்கனவே முடியவில்லை. அவர் மிக திறமையான நடிகர். புனித் ராஜ்குமார் இறந்த பிறகு 2நாட்கள் எனக்கு தூக்கம் வராமல் கஷ்டப்பட்டேன். எனக்கு சொந்த வீடு இல்லை. வீடு வாங்க வேண்டும் என்று சிறிது பணத்தை சேமித்து வைத்துள்ளேன். வீடு பின்பு கூட வாங்கிக்கொள்ள முடியும். புனித் ராஜ்குமார் நடத்திய சக்திதாமா அனாதை இல்ல குழந்தைகளின் கல்விச் செலவை நான் ஏற்கிறேன்.

இதற்கு அவரது குடும்பத்தினர் அனுமதி வழங்க வேண்டும் என்று கேட்கிறேன். புனித் விட்டு சென்ற நல்ல பணிகளை நாம் தொடர வேண்டும். அதற்கு எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள். அனைவருக்கும் இதயம் உள்ளது. ஆனால் நல்ல பணிகளை ஆற்ற வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் இருப்பது இல்லை. அவர் சமூக சேவைகளை வெளியில் தெரியாமல் செய்துள்ளார். நான் விளம்பரத்திற்காக இந்த கல்வி செலவை ஏற்பதாக கூறவில்லை. உள்ளபடியே அவரது இந்த நல்ல சேவையை தொடர வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இதை செய்கிறேன் என்றார் .

பிந்திய செய்திகள்

Main image

மண்முனைப்பற்று பிரதேசத்தின் மண்முனை கிராம சேவகர் பிரிவில் மண்முனை பாலத்தி அருகில் மீன் சந்தைக்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.

Main image

கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பன்சேனை பிரதேசத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தையான மகிழடித்தீவைச் சேர்ந்த சோமசுந்தரம் உதயகுமார் வயது (46) என்

Main image

ஒமிக்ரோன் கொரோனா திரிபு இலங்கையில் கண்டறியப்பட்டது.

Main image

நாடளாவிய ரீதியில்  உடன் அமுலுக்கு வரும் வகையில் எரிவாயு சிலிண்டர் விநியோகம்  இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

 

Main image

மட்டக்களப்பு நகர்ப்பகுதியில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றத்தவறிய பிரபலமான மூன்று உணவகங்கள் உட்பட 7 உணவகங்களை தலா 10 ஆயிரம் ரூபா வீதம் 70 ஆயிரம் ரூ

Main image

கோறளைப்பற்று வடக்கு, வாகரைப் பிரதேச செயலகத்திற்கான புதிய பிரதேச செயலாளராக பொறியியலாளர் ஜீ.அருணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

Main image

மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு 5 டிப்ஸ்..!!

 

1. உங்கள் வாழ்க்கையை நீங்கள் வாழுங்கள்.. அடுத்தவர் வாழ்க்கையை அல்ல..

Main image

எல்.பி எரிவாயு வெடிப்புகள் அல்லது அது தொடர்பான சிக்கல்கள் ஏற்பட்டால், நுகர்வோர் விற்பனை முகவர் அல்லது அருகிலுள்ள பொலிஸ் நிலையம் அல்லது 0115811927 –