வளிமண்டல குழப்பம் காரணமாக மட்டக்களப்பு உட்பட 10மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

Main image
Image

இலங்கையின் தென் கிழக்கு கடற்பகுதியில் நிலவும் சிறிய வளிமண்டல குழப்பம் காரணமாக, 10 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம்  அறிவித்துள்ளது.

மேற்குறிப்பிட்ட குழப்பம், அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுவதுடன், இது வடமேற்கு திசையில் நகரக்கூடும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது.அதன்படி, முல்லைத்தீவு, வவுனியா, திருகோணமலை, அநுராதபுரம், பொலன்னறுவை, மாத்தளை, மட்டக்களப்பு, அம்பாறை, பதுளை, மொனராகலை உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், நாட்டின் சில பகுதிகளில் 75 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

பிந்திய செய்திகள்

Main image

மண்முனைப்பற்று பிரதேசத்தின் மண்முனை கிராம சேவகர் பிரிவில் மண்முனை பாலத்தி அருகில் மீன் சந்தைக்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.

Main image

கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பன்சேனை பிரதேசத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தையான மகிழடித்தீவைச் சேர்ந்த சோமசுந்தரம் உதயகுமார் வயது (46) என்

Main image

ஒமிக்ரோன் கொரோனா திரிபு இலங்கையில் கண்டறியப்பட்டது.

Main image

நாடளாவிய ரீதியில்  உடன் அமுலுக்கு வரும் வகையில் எரிவாயு சிலிண்டர் விநியோகம்  இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

 

Main image

மட்டக்களப்பு நகர்ப்பகுதியில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றத்தவறிய பிரபலமான மூன்று உணவகங்கள் உட்பட 7 உணவகங்களை தலா 10 ஆயிரம் ரூபா வீதம் 70 ஆயிரம் ரூ

Main image

கோறளைப்பற்று வடக்கு, வாகரைப் பிரதேச செயலகத்திற்கான புதிய பிரதேச செயலாளராக பொறியியலாளர் ஜீ.அருணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

Main image

மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு 5 டிப்ஸ்..!!

 

1. உங்கள் வாழ்க்கையை நீங்கள் வாழுங்கள்.. அடுத்தவர் வாழ்க்கையை அல்ல..

Main image

எல்.பி எரிவாயு வெடிப்புகள் அல்லது அது தொடர்பான சிக்கல்கள் ஏற்பட்டால், நுகர்வோர் விற்பனை முகவர் அல்லது அருகிலுள்ள பொலிஸ் நிலையம் அல்லது 0115811927 –