அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து இடைநிறுத்தம்

Main image
Image

கட்சியின் தீர்மானத்திற்கு எதிராக வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவு வழங்கிய அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

இதன்படி, அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான இஷ்ஹாக் றஹ்மான், அலி சப்ரி ரஹீம், முஷாரப் முதுநபீன் ஆகியோரை கட்சியின் உறுப்புரிமையிலிருந்து இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அவர்களுக்கெதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும் எனவும் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டதாக அந்த கட்சி அறிவித்துள்ளது.

2022ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மீதான முதலாவது வாக்கெடுப்பிலும் இறுதி வாக்கப்பெடுப்பிலும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கட்சியின் தலைவர் ரிஷாத் பதியூதீன், இஷ்ஹாக் றஹ்மான், அலி சப்றி றஹீம் மற்றும் முஷாரப் முதுநபீன் ஆகிய நால்வரும் எதிராக வாக்களிக்க வேண்டும் என ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டிருந்தது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அரசியல் அதிகார சபைக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது.

இந்த தீர்மானம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் நால்வருக்கும் மின்னஞ்சல், குறுஞ்செய்தி, வட்ஸ்அப், கடிதம் மூலமாகவும் அறிவிக்கப்பட்டிருந்ததாக அந்த கட்சியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், கட்சியின் தலைவர் ரிஷாட் பதியூதீன் தவிர்ந்த ஏனைய மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களும் கட்சியின் தீர்மானத்திற்கு எதிராக  வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர்.

இதன்போது, கட்சியின் யாப்பில் அரசியல் அதிகார சபைக்கு வழங்கப்பட்டுள்ள சரத்துக்களின் அடிப்படையில், கட்சியின் தீர்மானத்திற்கு எதிராக வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த உறுப்பினர்கள் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.  

பிந்திய செய்திகள்

Main image

மண்முனைப்பற்று பிரதேசத்தின் மண்முனை கிராம சேவகர் பிரிவில் மண்முனை பாலத்தி அருகில் மீன் சந்தைக்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.

Main image

கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பன்சேனை பிரதேசத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தையான மகிழடித்தீவைச் சேர்ந்த சோமசுந்தரம் உதயகுமார் வயது (46) என்

Main image

ஒமிக்ரோன் கொரோனா திரிபு இலங்கையில் கண்டறியப்பட்டது.

Main image

நாடளாவிய ரீதியில்  உடன் அமுலுக்கு வரும் வகையில் எரிவாயு சிலிண்டர் விநியோகம்  இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

 

Main image

மட்டக்களப்பு நகர்ப்பகுதியில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றத்தவறிய பிரபலமான மூன்று உணவகங்கள் உட்பட 7 உணவகங்களை தலா 10 ஆயிரம் ரூபா வீதம் 70 ஆயிரம் ரூ

Main image

கோறளைப்பற்று வடக்கு, வாகரைப் பிரதேச செயலகத்திற்கான புதிய பிரதேச செயலாளராக பொறியியலாளர் ஜீ.அருணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

Main image

மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு 5 டிப்ஸ்..!!

 

1. உங்கள் வாழ்க்கையை நீங்கள் வாழுங்கள்.. அடுத்தவர் வாழ்க்கையை அல்ல..

Main image

எல்.பி எரிவாயு வெடிப்புகள் அல்லது அது தொடர்பான சிக்கல்கள் ஏற்பட்டால், நுகர்வோர் விற்பனை முகவர் அல்லது அருகிலுள்ள பொலிஸ் நிலையம் அல்லது 0115811927 –