இன்று முதல் பிறப்புச் சான்றிதழில் தேசிய அடையாள இலக்கம் - ஆட்பதிவு திணைக்களம் தெரிவிப்பு

Main image
Image

புதிதாக பிறக்கும் குழந்தைகளுக்கான பிறப்புச் சான்றிதழில், தேசிய அடையாள இலக்கத்தை உள்ளீடு செய்யும் நடைமுறை இன்று முதல் ஆரம்பிக்கப்படுவதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த 2021 டிசம்பர் 14 திகதிய அமைச்சரவை தீர்மானத்துக்கமைய, குழந்தை பிறப்பின்போது, பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் வழங்கப்படும் பிறப்புச்சான்றிதழில், ஆட்பதிவு திணைக்களத்தினால் வழங்கப்படும் தேசிய அடையாள இலக்கம் உள்ளீடு செய்யப்படவுள்ளது.

மேற்படி இரு திணைக்களங்களுக்கும் இடையில் இணையம் மூலம் தகவல்கள் பரிமாற்றம் இடம்பெறும். இந்த புதிய பிறப்புச் சான்றிதழ் வழங்கும், பரீட்சார்த்த திட்டம் கம்பஹா, தெஹிவளை, ஹங்குராங்கெத்த, குருணாகல், இரத்தினபுரி மற்றும் தமன்கடுவ ஆகிய பிரதேச செயலகங்கள் ஊடாக முன்னெடுக்கப்படவுள்ளது.

இவ்வாறு பிறப்புச் சான்றிதழை பெறும் ஒருவர், தனக்கு 15 வயது பூர்த்தியானதன் பின்னர் தேசிய அடையாள அட்டையை பெற விண்ணப்பிக்கையில், மேற்படி பிறப்பு சான்றிதழில் உள்ள அடையாள இலக்கத்திலேயே தனக்கான தேசிய அடையாள அட்டையை பெறமுடியும். இந்த முறைமையின் ஊடாக ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும்போது, பிறப்பு முதல் அனைத்து நடவடிக்கைகளுக்காகவும், ஒரே அடையாள இலக்கத்தை பயன்படுத்துவதால், தனிநபர் கல்வி, சுகாதாரம், நிதி மற்றும் சமூக தரவுகளை சேமிக்க அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு இலகுவானதாக அமையும்.

மேலும், ஒரே இலக்கத்தின் கீழ் அனைத்து தரவுகளும் காணப்படுவதால், குறித்த நிறுவனங்கள் ஊடாக பொதுமக்களுக்கு இலகுவாக சேவை பெற்றுக்கொள்ளவும் முடியும் என ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது. 

பிந்திய செய்திகள்

Main image

வவுனியா தேக்கவத்தை பகுதியில் விபச்சார விடுதி ஒன்று பொலிசாரால் இன்று (19) பிற்பகல் முற்றுகையிடப்பட்டதுடன், இரு பெண்கள் உட்பட நான்கு பேர் கைது செய்யப

Main image

முஸ்​லிம் பெண்கள் அணியும் அபாயாவை அணிந்துகொண்டு, அங்கும் இங்கும் அலைந்து திரிந்து கொண்டிருந்த முஸ்லிம் இளைஞன், கைது செய்யப்பட்டுள்ளார்.

Main image

மட்டக்களப்பு செங்கலடி - ரமேஸ்புரம் சித்திரவேலாயுத சுவாமி ஆலய வருடாந்த உற்சவத்தின் பாற்குடபவனி  புதன்கிழமை (17) அன்று வெகு விமர்சையாக இடம்பெற்றது.

Main image

இலங்கைக்கான அவசர உதவித் தொகையை 75 மில்லியன் அவுஸ்ரேலிய டொலர்களாக அதிகரிக்க அவுஸ்ரேலிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

Main image

பொலிஸாரினால் கைதான பிடியாணை பிறப்பிக்கப்பட்ட சந்தேக நபர் வசமிருந்து கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

Main image

இணையத்தளம் ஊடாக சிறுவர்கள் பாலியல் ரீதியான தொந்தரவுக்கு உட்படுத்துபவர்கள் தொடர்பிலான தகவல்களை 1929 என்ற இலக்கத்திற்கு வழங்குமாறு கோரப்பட்டுள்ளது.

Main image

ஒமிக்ரோன் வைரஸ் திரிபால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு கடுமையான காய்ச்சல் ஏற்படுவதற்கான அபாயம் உள்ளதாக ரிட்ஜ்வே சிறுவர்கள் வைத்தியசாலையின் விசேட வைத

Main image

17 வயது சிறுமிகள் இருவரை கடத்திச் சென்றமை மற்றும் தகாத உறவு கொண்டமை என்ற குற்றச்சாட்டுக்களின் கீழ் பேருந்து சாரதிகள் இருவர், நடத்துநர்கள் இருவர் உள

Main image

சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக வெளிநாட்டுக்கு செல்ல முயன்ற 10 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.