எரிபொருள் பெற்றுக் கொள்ள வாகன இலக்கத் தகடுகளை மாற்றினால் அபராதம்

Main image
Image

எரிபொருள் பெற்றுக் கொள்வதற்காக வாகன இலக்கத் தகடுகளை மாற்றுவது குறித்து தெரிய வந்தால், குறித்த நபருக்கு 20,000 ரூபா அபராதம் அல்லது மூன்று மாத கால சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று பொலிஸ் தலைமையகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த குற்றத்திற்காக வாகனத்தின் உரிமையாளரை கைது செய்ய முடியும். பின்னர் குற்றத்திற்காக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதன் மூலம் இந்த தண்டனையை வழங்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

1984 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க மோட்டார் வாகனச் சட்டம், 2009 ஆம் ஆண்டின் 8 ஆம் இலக்க மோட்டார் வாகன வாகன சட்ட திருத்தத்திற்கு அமைவாக முதல் தடவையாக இந்த குற்றத்தில் ஈடுபட்டவர்களுக்கு 15,000 ரூபாய்க்கு குறையாத மற்றும் 20,000 ரூபாய்க்கு மேற்படாத அபராதம் அல்லது மூன்று மாத கால சிறைத்தண்டனை விதிக்க நீதிமன்றத்திற்கு அதிகாரம் உண்டு. மேலும், இதே குற்றச்சாட்டை இரண்டாவது முறை அல்லது அதற்கு மேல் மேற்கொள்ளும் நபருக்கு 30,000 ரூபாய்க்கு குறையாத ஆனால் 50,000 ரூபாய்க்கு மேற்படாத அபராதம் அல்லது மூன்று மாத கால சிறைத்தண்டனை விதிக்க நீதிமன்றத்திற்கு அதிகாரம் உண்டு.

வாகன இலக்கத் தகடுகளுக்கு அமைய எரிபொருள் விநியோகிக்கப்படும் முறை நேற்று முன்தினம் (21) ஆரம்பமானது. அந்த சந்தர்ப்பத்தில் சிலர் வாகன இலக்கத் தகடுகளை மாற்றி எரிபொருட்களை பெற்றுக் கொள்வதற்காக எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு வருகை தந்தமை குறித்து சமூக ஊடகங்களில் காணக் கூடியதாக இருந்தது.

பிந்திய செய்திகள்

Main image

முஸ்​லிம் பெண்கள் அணியும் அபாயாவை அணிந்துகொண்டு, அங்கும் இங்கும் அலைந்து திரிந்து கொண்டிருந்த முஸ்லிம் இளைஞன், கைது செய்யப்பட்டுள்ளார்.

Main image

மட்டக்களப்பு செங்கலடி - ரமேஸ்புரம் சித்திரவேலாயுத சுவாமி ஆலய வருடாந்த உற்சவத்தின் பாற்குடபவனி  புதன்கிழமை (17) அன்று வெகு விமர்சையாக இடம்பெற்றது.

Main image

இலங்கைக்கான அவசர உதவித் தொகையை 75 மில்லியன் அவுஸ்ரேலிய டொலர்களாக அதிகரிக்க அவுஸ்ரேலிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

Main image

பொலிஸாரினால் கைதான பிடியாணை பிறப்பிக்கப்பட்ட சந்தேக நபர் வசமிருந்து கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

Main image

இணையத்தளம் ஊடாக சிறுவர்கள் பாலியல் ரீதியான தொந்தரவுக்கு உட்படுத்துபவர்கள் தொடர்பிலான தகவல்களை 1929 என்ற இலக்கத்திற்கு வழங்குமாறு கோரப்பட்டுள்ளது.

Main image

ஒமிக்ரோன் வைரஸ் திரிபால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு கடுமையான காய்ச்சல் ஏற்படுவதற்கான அபாயம் உள்ளதாக ரிட்ஜ்வே சிறுவர்கள் வைத்தியசாலையின் விசேட வைத

Main image

17 வயது சிறுமிகள் இருவரை கடத்திச் சென்றமை மற்றும் தகாத உறவு கொண்டமை என்ற குற்றச்சாட்டுக்களின் கீழ் பேருந்து சாரதிகள் இருவர், நடத்துநர்கள் இருவர் உள

Main image

சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக வெளிநாட்டுக்கு செல்ல முயன்ற 10 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

Main image

இன்று முதல் ஒரு கிலோ நாட்டரிசி நெல் 120 ரூபாவிற்கு கொள்வனவு செய்யப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.