கிளிநொச்சியில் காணாமல் போன இளைஞர் மட்டக்களப்பில் காதலியுடன் கண்டுபிடிப்பு

கிளிநொச்சியில் காணாமல் போன இளைஞர் ஒருவர், மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். கிளிநொச்சி, கனகாம்பிகை குளம் பகுதியைச் சேர்ந்த உதயராஜ் அம்சவர்தன் என்பவர் கடந்த 16 ஆம் திகதி காணாமல் போயிருந்ததாக கிளிநொச்சி பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.
குறித்த இளைஞன் கிளிநொச்சியில் அமைந்துள்ள தொழிற்பயிற்சி நிலையம் ஒன்றுக்கு சென்றிருந்த நிலையிலேயே காணாமல் போயிருந்தார் என குறித்த இளைஞரின் தாயாரினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் குறித்த இளைஞன் மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கற்சேனை பகுதியில் அப்பகுதி இராணுவத்தினரால் அடையாளம் காணப்பட்டு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளார்.
குறித்த நபர் அவரது காதலியுடன் இங்கு வந்து இருப்பதாகவும் இதன் போது தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பிந்திய செய்திகள்
நாட்டில் இன்று (திங்கட்கிழமை) ஆயிரத்து 500 முதல் 2 ஆயிரம் வரையான பேருந்துகள் மாத்திரமே சேவையில் ஈடுபடுத்த முடியும் என இலங்கை தனியார் பேருந்து உரிமை
லங்காபுர பிரதேச சபையின் தலைமை நிர்வாக அதிகாரி கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
இயங்குநிலை தென்மேற்கு பருவப் பெயர்ச்சி நிலைமை காரணமாக மேற்கு மற்றும் தெற்கு கடற்பரப்புகளிலும் நாட்டின் தென் அரைப்பாகத்திலும் தற்போது நிலவும் காற்று
ரம்புட்டான் பழத்தை விழுங்கிய 10 வயதுச் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
நெலுவ பிங்கந்தஹேன பிரதேசத்தில் 20 வயதுடைய இளைஞன் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வருகை முனையத்தில் சுங்க அதிகாரிகள் 2.98 கிலோகிராம் தங்கத்தைக் கைப்பற்றியுள்ளனர்.
நேற்று (01) தனது இரண்டு பிள்ளைகளுடன் சந்திரிகா வாவியில் குதித்து தற்கொலை செய்து கொண்ட தாய் எழுதிய கடிதம் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் கைதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இராணுவ வீரர்கள் இருவர் மற்றும் விமானப்படை வீரர்கள் இருவர் கைது செய்யப்பட்ட
ஊர்காவற்துறை கடலில் இருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.