நகைக்கடை உடைக்கப்பட்டு பில்லியன் கணக்கில் கொள்ளை சம்பவம்

கொழும்பு, கொள்ளுப்பிட்டி, பித்தல சந்தியில் உள்ள இரத்தினக்கல் மற்றும் நகைக்கடை உடைக்கப்பட்டு 1.5 பில்லியனுக்கும் அதிக பெறுமதியான இரத்தினக்கற்கள் மற்றும் ஆபரணங்கள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை கொம்பனித்தெரு பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். கடந்த 18ஆம் திகதி அதிகாலை 5.00 மணிக்கும் 7.00 மணிக்கும் இடையில் இந்த திருட்டு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன் உரிமையாளர் வழங்கிய முறைப்பாட்டின் பேரில், பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சந்தேகநபர் கடையின் இரும்புக் கதவுகளை உடைத்து இரத்தினக் கற்கள் பதித்த தங்க நகைகள் உட்பட பல நகைகளைத் திருடிச் சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. தலைக்கவசம் மற்றும் முகமூடி அணிந்து கடைக்குள் நுழைந்த காட்சிகள் சிசிரிவி கமெராவில் பதிவாகியுள்ளது. அதனை அடிப்படையாக வைத்து சந்தேக நபரை கைது செய்வதற்கான நடவடிக்கையை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
பிந்திய செய்திகள்
நாட்டில் இன்று (திங்கட்கிழமை) ஆயிரத்து 500 முதல் 2 ஆயிரம் வரையான பேருந்துகள் மாத்திரமே சேவையில் ஈடுபடுத்த முடியும் என இலங்கை தனியார் பேருந்து உரிமை
லங்காபுர பிரதேச சபையின் தலைமை நிர்வாக அதிகாரி கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
இயங்குநிலை தென்மேற்கு பருவப் பெயர்ச்சி நிலைமை காரணமாக மேற்கு மற்றும் தெற்கு கடற்பரப்புகளிலும் நாட்டின் தென் அரைப்பாகத்திலும் தற்போது நிலவும் காற்று
ரம்புட்டான் பழத்தை விழுங்கிய 10 வயதுச் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
நெலுவ பிங்கந்தஹேன பிரதேசத்தில் 20 வயதுடைய இளைஞன் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வருகை முனையத்தில் சுங்க அதிகாரிகள் 2.98 கிலோகிராம் தங்கத்தைக் கைப்பற்றியுள்ளனர்.
நேற்று (01) தனது இரண்டு பிள்ளைகளுடன் சந்திரிகா வாவியில் குதித்து தற்கொலை செய்து கொண்ட தாய் எழுதிய கடிதம் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் கைதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இராணுவ வீரர்கள் இருவர் மற்றும் விமானப்படை வீரர்கள் இருவர் கைது செய்யப்பட்ட
ஊர்காவற்துறை கடலில் இருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.