அத்தியாவசிய சுகாதார சேவைகளுக்காக எரிபொருள் நிலையங்களை ஒதுக்குவதற்கு தீர்மானம்

Main image
Image

அத்தியாவசிய சுகாதார சேவைகளுக்காக எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக தெரிவு செய்யப்பட்ட எரிபொருள் நிலையங்களை வெள்ளிக்கிழமைகளில் ஒதுக்குவதற்கு எரிசக்தி அமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது . இன்று ( ஞாயிற்க்கிழமை ) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் காஞ்சன விஜேசேகர இதனை தெரிவித்தார் .

எரிபொருள் நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பணியாளர்கள் பணிக்கு சமூகமளிக்க முடியாத காரணத்தினால் வைத்தியசாலைகளில் சத்திரசிகிச்சைகள் கூட தாமதமாக நடைபெறுவதாக சுகாதார அமைச்சின் அதிகாரிகளும் GMOA வும் இணைந்து கவலை தெரிவித்துள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

எனவே, ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை அவசர சுகாதார சேவைகளுக்கு ஒதுக்கப்படும் வகையில், மாவட்ட வாரியாக தேர்ந்தெடுக்கப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களை பரிந்துரைக்குமாறு சுகாதார அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதேவேளை சுகாதார ஊழியர்களுக்கும் பொது போக்குவரத்து மூலம் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிந்திய செய்திகள்

Main image

நாட்டில் இன்று (திங்கட்கிழமை) ஆயிரத்து 500 முதல் 2 ஆயிரம் வரையான பேருந்துகள் மாத்திரமே சேவையில் ஈடுபடுத்த முடியும் என இலங்கை தனியார் பேருந்து உரிமை

Main image

லங்காபுர பிரதேச சபையின் தலைமை நிர்வாக அதிகாரி கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

Main image

இயங்குநிலை தென்மேற்கு பருவப் பெயர்ச்சி நிலைமை காரணமாக மேற்கு மற்றும் தெற்கு கடற்பரப்புகளிலும் நாட்டின் தென் அரைப்பாகத்திலும் தற்போது நிலவும் காற்று

Main image

ரம்புட்டான் பழத்தை விழுங்கிய 10 வயதுச் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

Main image

நெலுவ பிங்கந்தஹேன பிரதேசத்தில் 20 வயதுடைய இளைஞன் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

Main image

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வருகை முனையத்தில் சுங்க அதிகாரிகள் 2.98 கிலோகிராம் தங்கத்தைக் கைப்பற்றியுள்ளனர்.

Main image

நேற்று (01) தனது இரண்டு பிள்ளைகளுடன் சந்திரிகா வாவியில் குதித்து தற்கொலை செய்து கொண்ட தாய் எழுதிய கடிதம் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

Main image

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் கைதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இராணுவ வீரர்கள் இருவர் மற்றும் விமானப்படை வீரர்கள் இருவர் கைது செய்யப்பட்ட

Main image

ஊர்காவற்துறை கடலில் இருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.