கோடாரியால் ஒருவர் வெட்டிக் கொலை - அக்கரைப்பற்று சின்னமுகத்துவாரம் பகுதியில் சம்பவம்

Main image
Image

அம்பாறை அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள சின்னமுகத்துவாரம் பிரதேசத்தில் குடும்ப தகராறு காரணமாக பக்கத்து வீட்டு ஆண் ஒருவரை கோடாரியால் வெட்டிக் கொலை செய்த சம்பவமொன்று நேற்று (24) இரவு இடம்பெற்றுள்ளதாக அக்கரைப்பற்று பொலிசார் தெரிவித்தனர். சின்னமுகத்துவாரம் அக்கரைப்பற்று 9 பிரிவைச் சேர்ந்த 33 வயதுடைய குணரட்ணம் குணதாஸா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த இரு குடும்பங்களுக்கும் நீண்டகாலமாக குடும்பத் தகராறு காணப்படும் நிலையில் பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் வழக்குகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் சம்பவ தினமான நேற்று இரவு 8.15 மணிக்கு இரு குடும்பத்திற்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து அதில் ஒருவர் பக்கத்து வீட்டுக்காரர் மீது கோடாரியால் தாக்குதல் மேற்கொண்டுள்ளார். இதில் படுகாயமடைந்த குறித்த நபர் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் 36 வயதுடைய சந்தேகநபரை பொலிசார் தாக்குதல் மேற்கொண்ட கோடாரியுடன் கைது செய்துள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

பிந்திய செய்திகள்

Main image

நாட்டில் இன்று (திங்கட்கிழமை) ஆயிரத்து 500 முதல் 2 ஆயிரம் வரையான பேருந்துகள் மாத்திரமே சேவையில் ஈடுபடுத்த முடியும் என இலங்கை தனியார் பேருந்து உரிமை

Main image

லங்காபுர பிரதேச சபையின் தலைமை நிர்வாக அதிகாரி கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

Main image

இயங்குநிலை தென்மேற்கு பருவப் பெயர்ச்சி நிலைமை காரணமாக மேற்கு மற்றும் தெற்கு கடற்பரப்புகளிலும் நாட்டின் தென் அரைப்பாகத்திலும் தற்போது நிலவும் காற்று

Main image

ரம்புட்டான் பழத்தை விழுங்கிய 10 வயதுச் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

Main image

நெலுவ பிங்கந்தஹேன பிரதேசத்தில் 20 வயதுடைய இளைஞன் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

Main image

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வருகை முனையத்தில் சுங்க அதிகாரிகள் 2.98 கிலோகிராம் தங்கத்தைக் கைப்பற்றியுள்ளனர்.

Main image

நேற்று (01) தனது இரண்டு பிள்ளைகளுடன் சந்திரிகா வாவியில் குதித்து தற்கொலை செய்து கொண்ட தாய் எழுதிய கடிதம் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

Main image

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் கைதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இராணுவ வீரர்கள் இருவர் மற்றும் விமானப்படை வீரர்கள் இருவர் கைது செய்யப்பட்ட

Main image

ஊர்காவற்துறை கடலில் இருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.