immigration.gov.lk அல்லது 0707101060 ஊடாக முற்பதிவு செய்தே வரவும்

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தில் ஒரு நாள் சேவை மற்றும் சாதாரண சேவையின் கீழ் கடவுச்சீட்டுக்களைப் பெற்றுக்கொள்ள விண்ணப்பிக்கும் போது முன்கூட்டியே திகதியையும் நேரத்தையும் ஒதுக்கிக்கொண்டு வருகை தருமாறு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது. குடிவரவு மற்றும் குடியகல்வுக் கட்டுப்பாட்டாளர் நாயகம் விடுத்துள்ள அறிவித்தலிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மே 17 ஆம் திகதி முதல் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தில் ஒரு நாள் சேவை மற்றும் சாதாரண சேவையின் கீழ் கடவுச்சீட்டுக்களைப் பெற்றுக்கொள்ள விண்ணப்பிக்கும் போது முன்கூட்டியே திகதியையும் நேரத்தையும் ஒதுக்கிக்கொண்டு வருகைதருமாறு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது. எனினும், சேவைப் பெறுநர்கள் பலர் முன்கூட்டியே திகதியையும் நேரத்தையும் ஒதுக்கிக்கொள்ளாது சேவைகளைப் பெற்றுக்கொள்ள வருகைதருவது அவதானிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னர், முன்கூட்டியே திகதியையும் நேரத்தையும் ஒதுக்கிக்கொண்டு ஒரு நாள் சேவை மற்றும் சாதாரண சேவையின் கடவுச்சீட்டுக்களைப் பெற்றுக்கொள்ள வருபவர்களுக்கு மாத்திரம் சேவைகள் வழங்கப்படும் என்பதை மனவருத்தத்துடன் அறியத்தருகின்றேன்.
அதற்கிணங்க, முன்கூட்டியே திகதியையும் நேரத்தையும் ஒதுக்கிக்கொள்ளாது சேவைகளைப் பெற்றுக்கொள்ள வருகைத்தரும் சேவைப்பெறுநர்கள் அசௌகரியங்களுக்கு உட்படுவதை தவிர்க்க முடியாது. www.immigration.gov.lk எனும் இணையத்தளத்தையோ அல்லது 0707101060 எனும் தொலைபேசி இலக்கத்தையோ பயன்படுத்தி திகதியையும் நேரத்தையும் ஒதுக்கிக்கொள்ள முடியும். தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பதாயின் கடமை நாட்களில் மு.ப. 8.30 முதல் பி.ப. 3.00 வரை அதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. கட்டுப்பாட்டாளர் நாயகம் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம்
பிந்திய செய்திகள்
நாட்டில் இன்று (திங்கட்கிழமை) ஆயிரத்து 500 முதல் 2 ஆயிரம் வரையான பேருந்துகள் மாத்திரமே சேவையில் ஈடுபடுத்த முடியும் என இலங்கை தனியார் பேருந்து உரிமை
லங்காபுர பிரதேச சபையின் தலைமை நிர்வாக அதிகாரி கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
இயங்குநிலை தென்மேற்கு பருவப் பெயர்ச்சி நிலைமை காரணமாக மேற்கு மற்றும் தெற்கு கடற்பரப்புகளிலும் நாட்டின் தென் அரைப்பாகத்திலும் தற்போது நிலவும் காற்று
ரம்புட்டான் பழத்தை விழுங்கிய 10 வயதுச் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
நெலுவ பிங்கந்தஹேன பிரதேசத்தில் 20 வயதுடைய இளைஞன் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வருகை முனையத்தில் சுங்க அதிகாரிகள் 2.98 கிலோகிராம் தங்கத்தைக் கைப்பற்றியுள்ளனர்.
நேற்று (01) தனது இரண்டு பிள்ளைகளுடன் சந்திரிகா வாவியில் குதித்து தற்கொலை செய்து கொண்ட தாய் எழுதிய கடிதம் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் கைதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இராணுவ வீரர்கள் இருவர் மற்றும் விமானப்படை வீரர்கள் இருவர் கைது செய்யப்பட்ட
ஊர்காவற்துறை கடலில் இருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.