மருத்துவ நெருக்கடியை தவிர்க்க முதற்கட்டமாக உலக சுகாதார ஸ்தாபன உதவியின் கீழ் 2 மில்லியன் டொலர்

நாடு தற்போது எதிர்கொண்டுள்ள மருந்துப்பொருட்கள் நெருக்கடிக்கு தீர்வுகாணும் வகையில் தேவையான ஒத்துழைப்பை வழங்குவதற்கு உலக சுகாதார அமைப்பு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் உறுதியளித்துள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் உலக சுகாதார அமைப்பின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி கலாநிதி அலாகா சிங்குக்குமிடையில் பிரதமர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றுள்ளது.
அதன்போது இலங்கைக்கு உலக சுகாதார அமைப்பு பெற்றுக்கொடுக்கும் நிவாரண வேலைத்திட்டத்தின் முதல் கட்டமாக இரண்டு மில்லியன் டொலர் பெறுமதியான சுகாதார வசதிகளை பெற்றுக்கொடுப்பதற்கு அந்த அமைப்பு உறுதியளித்துள்ளது.
அதற்கிணங்க தற்போதைய அரசாங்கம் ஆரம்பித்துள்ள புதிய சுகாதார வேலைத்திட்டத்தின்கீழ் தற்போதைய நெருக்கடிகளை எதிர்வரும் ஜுலை, ஓகஸ்ட் மாதமளவில் நிவர்த்திசெய்யமுடியுமென உலக சுகாதார அமைப்பின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இலங்கையில் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணித் தாய்மாரின் போசாக்கை அதிகரிக்கும் வகையில் உலக சுகாதார நிறுவனம் தொடர்ச்சியாக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன்போது கருத்துத் தெரிவித்திருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இலங்கையின் சுகாதாரத் துறையை முன்னேற்றுவதற்காக உலக சுகாதார அமைப்பு பெற்றுக்கொடுக்கும் ஒத்துழைப்புக்களுக்கு பாராட்டுத் தெரிவித்துள்ளார். அத்துடன் இந்தியா, பங்களாதேஷ் ஆகிய நாடுகள் இலங்கைக்கு வழங்கும் ஒத்துழைப்புக்கள் தொடர்பில் அவர் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார். அதேவேளை, இலங்கையை சுகாதார காப்புறுதிக்கு உட்படுத்துவதற்கு எதிர்பார்ப்பதாகவும் அதற்காக உலக சுகாதார அமைப்பின் ஒத்துழைப்பு அவசியமென்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்ற மேற்படி சந்திப்பில் சுகாதாரத் துறையில் நிலவும் சிக்கல்கள் தொடர்பில் ஆராய்வதற்காக பிரதமரினால் நியமிக்கப்பட்டுள்ள விசேட குழுவின் தலைவர் ருவான் விஜயவர்தன சுகாதார அமைச்சின் கொரோனா வைரஸ் தொடர்பான இணைப்பாளர் மற்றும் தொழில்நுட்ப சேவை பணிப்பாளர் விசேட மருத்துவ நிபுணர் அன்வர் ஹந்தானி ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர்
பிந்திய செய்திகள்
நாட்டில் இன்று (திங்கட்கிழமை) ஆயிரத்து 500 முதல் 2 ஆயிரம் வரையான பேருந்துகள் மாத்திரமே சேவையில் ஈடுபடுத்த முடியும் என இலங்கை தனியார் பேருந்து உரிமை
லங்காபுர பிரதேச சபையின் தலைமை நிர்வாக அதிகாரி கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
இயங்குநிலை தென்மேற்கு பருவப் பெயர்ச்சி நிலைமை காரணமாக மேற்கு மற்றும் தெற்கு கடற்பரப்புகளிலும் நாட்டின் தென் அரைப்பாகத்திலும் தற்போது நிலவும் காற்று
ரம்புட்டான் பழத்தை விழுங்கிய 10 வயதுச் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
நெலுவ பிங்கந்தஹேன பிரதேசத்தில் 20 வயதுடைய இளைஞன் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வருகை முனையத்தில் சுங்க அதிகாரிகள் 2.98 கிலோகிராம் தங்கத்தைக் கைப்பற்றியுள்ளனர்.
நேற்று (01) தனது இரண்டு பிள்ளைகளுடன் சந்திரிகா வாவியில் குதித்து தற்கொலை செய்து கொண்ட தாய் எழுதிய கடிதம் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் கைதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இராணுவ வீரர்கள் இருவர் மற்றும் விமானப்படை வீரர்கள் இருவர் கைது செய்யப்பட்ட
ஊர்காவற்துறை கடலில் இருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.