இழுதுமீனுக்கு மீனவர் பலி - காரைதீவில் சம்பவம்.

Main image
Image

கடலில் வாழும் இழுது மீனின் பிடிக்குள் சிக்கி இளம் மீனவர் ஒருவர் பலியாகியுள்ளார். இச் சம்பவம் நேற்று (8) ஞாயிற்றுக்கிழமை காரைதீவில் இடம்பெற்றுள்ளது. காரைதீவு.8 ஆம் பிரிவைச் சேர்ந்த சுப்பிரமணியம் ஜெயரஞ்சன் ( வயது 51) என்ற மீனவரே இவ்விதம் இழுது மீனின் பிடிக்குள் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

காரைதீவில் முதலாவதாக இடம் பெற்ற இழுதுமீன் பலி என்பதால் மீனவர் மத்தியில் அச்சமும் சோகமும் நிலவுகிறது. 3 பிள்ளைகளின் தந்தையான சு.ஜெயரஞ்சன் பிள்ளைகளையும் மனைவி வி.சுகந்தியையும் விட்டு சென்றுள்ளார். கடலில் வாழும் "சொறி முட்டை" என அழைக்கப்படும் இழுதுமீன், நுங்கு மீன் ,ஜெலிபிஸ் என்றெல்லாம் அழைக்கப்படுகிறது.

நேற்று(8) காலை 7.30 மணியளவில் கடலுக்கு மாயாவலை மீன்பிடி தொழிலுக்காக சென்றவேளை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. கரையிலிருந்து சுமார் 100மீற்றர் கடலில் தோணி வந்து கொண்டிருந்தவேளை இறங்கி வலையை கழற்றும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த வேளையில் திடீரென இழுதுமீன் தலைப்பிட்டு மீனவரை சுற்றிக்கொண்டது.

இதை தற்செயலாக கண்ட ஏனைய மீனவர் அவரை காப்பாற்ற முயற்சி செய்தும் பலனளிக்கவில்லை. ஒருவாறு அவரை கரைக்கு கொண்டு வந்து வைத்திய சாலையில் சேர்த்தனர். எனினும்,காப்பாற்ற முடியவில்லை. பின்னர் தவிசாளர் கி.ஜெயசிறிலின் முயற்சியால் உறவினர்களிடம் சடலம் கையளிக்கப்பட்டது.

பிந்திய செய்திகள்

Main image

அம்பாறை அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள சின்னமுகத்துவாரம் பிரதேசத்தில் குடும்ப தகராறு காரணமாக பக்கத்து வீட்டு ஆண் ஒருவரை கோடாரியால் வெட்டிக் கொலை

Main image

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தில் ஒரு நாள் சேவை மற்றும் சாதாரண சேவையின் கீழ் கடவுச்சீட்டுக்களைப் பெற்றுக்கொள்ள விண்ணப்பிக்கும் போது முன்

Main image

திருகோணமலை, தம்பலகாமம் பகுதியில் இ.போ.ச பேருந்தும் பாரவூர்தியும் மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயரிழந்துள்ளனர்.

Main image

சிறிய ரக லொறி ஒன்றும் தனியார் பேருந்தும் மற்றும் முச்சக்கர வண்டியும் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Main image

நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவியேற்றுக் கொண்டார்.

Main image

சர்வதேச உதவிகளைப் பெறுவதற்கும், அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கும், வேலையின்மை மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாடு போன்ற பிர

Main image

நாடு தற்போது எதிர்கொண்டுள்ள மருந்துப்பொருட்கள் நெருக்கடிக்கு தீர்வுகாணும் வகையில் தேவையான ஒத்துழைப்பை வழங்குவதற்கு உலக சுகாதார அமைப்பு பிரதமர் ரணில

Main image

மாலியில் (MINUSMA) ஐக்கிய நாடுகள் அமைதிகாக்கும் பணிக்காக நன்கு பயிற்றுவிக்கப்பட்ட 243 பேர் உள்ளடக்கிய இலங்கை இராணுவ குழுவின் 100 பேரை உள்ளடக்கிய மு

Main image

நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் மழையுடனான வானிலை நாளையிலிருந்து சற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.