இன்றைய மின்வெட்டு அட்டவணை

Main image
Image

நாட்டில் இன்று (திங்கட்கிழமை) 3 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதற்கமைய, A முதல் L மற்றும் P முதல் W வரையான வலையங்களில், காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரையான காலப்பகுதியில் 2 மணிநேரமும், மாலை 5 மணிமுதல் இரவு 9 மணி வரையான காலப்பகுதியில் ஒரு மணி நேரமும் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. அதே நேரம், M N O X Y Z ஆகிய வலையங்களில் அதிகாலை 5 மணிமுதல் காலை 8 மணிவரையான காலப்பகுதியில் 3 மணித்தியாலங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அத்தோடு, கொழும்பு நகர்ப்புற வலையங்களில் (CC) காலை 6 மணி முதல் 9 மணிவரையான காலப்பகுதியில் 3 மணித்தியாலங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் செயலிழந்துள்ள மின் கட்டமைப்பை சீர் செய்வதற்கு மேலும் சில நாட்கள் தேவைப்படுவதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. எனினும் நாடு முழுவதும் தற்போது அமுலாக்கப்படும் மின்வெட்டு காலம் மேலும் அதிகரிக்கப்படமாட்டாது என அந்த சபை குறிப்பிட்டுள்ளது.

பிந்திய செய்திகள்

Main image

அம்பாறை அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள சின்னமுகத்துவாரம் பிரதேசத்தில் குடும்ப தகராறு காரணமாக பக்கத்து வீட்டு ஆண் ஒருவரை கோடாரியால் வெட்டிக் கொலை

Main image

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தில் ஒரு நாள் சேவை மற்றும் சாதாரண சேவையின் கீழ் கடவுச்சீட்டுக்களைப் பெற்றுக்கொள்ள விண்ணப்பிக்கும் போது முன்

Main image

திருகோணமலை, தம்பலகாமம் பகுதியில் இ.போ.ச பேருந்தும் பாரவூர்தியும் மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயரிழந்துள்ளனர்.

Main image

சிறிய ரக லொறி ஒன்றும் தனியார் பேருந்தும் மற்றும் முச்சக்கர வண்டியும் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Main image

நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவியேற்றுக் கொண்டார்.

Main image

சர்வதேச உதவிகளைப் பெறுவதற்கும், அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கும், வேலையின்மை மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாடு போன்ற பிர

Main image

நாடு தற்போது எதிர்கொண்டுள்ள மருந்துப்பொருட்கள் நெருக்கடிக்கு தீர்வுகாணும் வகையில் தேவையான ஒத்துழைப்பை வழங்குவதற்கு உலக சுகாதார அமைப்பு பிரதமர் ரணில

Main image

மாலியில் (MINUSMA) ஐக்கிய நாடுகள் அமைதிகாக்கும் பணிக்காக நன்கு பயிற்றுவிக்கப்பட்ட 243 பேர் உள்ளடக்கிய இலங்கை இராணுவ குழுவின் 100 பேரை உள்ளடக்கிய மு

Main image

நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் மழையுடனான வானிலை நாளையிலிருந்து சற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.