“அசானி” புயலால் இலங்கையின் கால நிலையில் மாற்றம்

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
வடக்கு மாகாணத்திலும் அனுராதபுரம் மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
நாடு முழுவதும், குறிப்பாக மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். இதேவேளை, தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த“Asani” அசானி என்ற சூறாவளியானது, நேற்று பாரிய சூறாவளியாக வலுவடைந்து திருகோணமலைக்கு வடகிழக்காக 840 கிலோமீட்டர் தூரத்தில் மையம் கொண்டிருந்தது. அது மே 10ஆம் திகதி வரைவடமேற்கு திசையில் நகர்ந்து மேற்கு – மத்திய வங்காள விரிகுடா கடற்பரப்பை அடையக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதன் பின், அது வடக்கு – வடமேற்கு திசைக்குத் திரும்பி மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்பை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
பிந்திய செய்திகள்
அம்பாறை அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள சின்னமுகத்துவாரம் பிரதேசத்தில் குடும்ப தகராறு காரணமாக பக்கத்து வீட்டு ஆண் ஒருவரை கோடாரியால் வெட்டிக் கொலை
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தில் ஒரு நாள் சேவை மற்றும் சாதாரண சேவையின் கீழ் கடவுச்சீட்டுக்களைப் பெற்றுக்கொள்ள விண்ணப்பிக்கும் போது முன்
திருகோணமலை, தம்பலகாமம் பகுதியில் இ.போ.ச பேருந்தும் பாரவூர்தியும் மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயரிழந்துள்ளனர்.
சிறிய ரக லொறி ஒன்றும் தனியார் பேருந்தும் மற்றும் முச்சக்கர வண்டியும் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவியேற்றுக் கொண்டார்.
சர்வதேச உதவிகளைப் பெறுவதற்கும், அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கும், வேலையின்மை மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாடு போன்ற பிர
நாடு தற்போது எதிர்கொண்டுள்ள மருந்துப்பொருட்கள் நெருக்கடிக்கு தீர்வுகாணும் வகையில் தேவையான ஒத்துழைப்பை வழங்குவதற்கு உலக சுகாதார அமைப்பு பிரதமர் ரணில
மாலியில் (MINUSMA) ஐக்கிய நாடுகள் அமைதிகாக்கும் பணிக்காக நன்கு பயிற்றுவிக்கப்பட்ட 243 பேர் உள்ளடக்கிய இலங்கை இராணுவ குழுவின் 100 பேரை உள்ளடக்கிய மு
நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் மழையுடனான வானிலை நாளையிலிருந்து சற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.