குடிவரவு, குடியகல்வு திணைக்கள சேவைகள் இன்று முதல் வழமைக்கு

கணனி அமைப்பில் ஏற்பட்டுள்ள அவசர திருத்தப்பணிகள் காரணமாக இடைநிறுத்தப்பட்ட கடவுச்சீட்டு வழங்கும் பணி இன்று திங்கட்கிழமை (9) முதல் வழமையான சேவையில் இருந்து ஆரம்பிக்கப்படும் என குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
மே 05, 06, 09 ஆம் திகதிகளில் சாதாரண சேவையின் கீழ் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள நேரத்தை ஒதுக்கிக்கொண்டவர்கள் மற்றும் மே 5ஆம் திகதி சாதாரண சேவையின் மூலம் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள விண்ணப்பப்படிவங்களை கையளிக்க வந்து திணைக்களத்தினால் இலக்கம் ஒன்றை பெற்றுக்கொண்டவர்களின் விண்ணப்பங்கள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், நாளை செவ்வாய்க்கிழமை( மே 10 )முதல், கடவுச்சீட்டுக்கான விண்ணப்பத்தை சமர்ப்பிப்பது கட்டாயமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. என்னும் வலைத்தளத்தை பார்வையிடுவதன் மூலமோ அல்லது 0707101060 என்ற எண்ணுக்கு அழைப்பதன் மூலமோ திகதிகள் மற்றும் நேரங்களை முன்பதிவு செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டை வழங்குவதற்கான கணினி அமைப்பை சீர் செய்யும் பணியில் திணைக்களத்தின் தொழில்நுட்ப ஊழியர்கள் தற்போது ஈடுபட்டுள்ளதுடன் கூடிய விரைவில் ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என திணைக்களம் அறிவித்துள்ளது.
பொதுமக்களுக்கு ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் வருந்துவதுடன், திணைக்களத்தின் தலைமை அலுவலகத்தினால் வழங்கப்படும் சேவைகள், பிராந்திய அலுவலகங்கள் மற்றும் விமான நிலையத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வு சேவைகள் வழங்கும் சேவைகள் வழமை போன்று இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிந்திய செய்திகள்
அம்பாறை அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள சின்னமுகத்துவாரம் பிரதேசத்தில் குடும்ப தகராறு காரணமாக பக்கத்து வீட்டு ஆண் ஒருவரை கோடாரியால் வெட்டிக் கொலை
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தில் ஒரு நாள் சேவை மற்றும் சாதாரண சேவையின் கீழ் கடவுச்சீட்டுக்களைப் பெற்றுக்கொள்ள விண்ணப்பிக்கும் போது முன்
திருகோணமலை, தம்பலகாமம் பகுதியில் இ.போ.ச பேருந்தும் பாரவூர்தியும் மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயரிழந்துள்ளனர்.
சிறிய ரக லொறி ஒன்றும் தனியார் பேருந்தும் மற்றும் முச்சக்கர வண்டியும் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவியேற்றுக் கொண்டார்.
சர்வதேச உதவிகளைப் பெறுவதற்கும், அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கும், வேலையின்மை மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாடு போன்ற பிர
நாடு தற்போது எதிர்கொண்டுள்ள மருந்துப்பொருட்கள் நெருக்கடிக்கு தீர்வுகாணும் வகையில் தேவையான ஒத்துழைப்பை வழங்குவதற்கு உலக சுகாதார அமைப்பு பிரதமர் ரணில
மாலியில் (MINUSMA) ஐக்கிய நாடுகள் அமைதிகாக்கும் பணிக்காக நன்கு பயிற்றுவிக்கப்பட்ட 243 பேர் உள்ளடக்கிய இலங்கை இராணுவ குழுவின் 100 பேரை உள்ளடக்கிய மு
நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் மழையுடனான வானிலை நாளையிலிருந்து சற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.