இன்று மாலை மின் துண்டிப்பு ஏற்படுமா?

நாட்டில் இன்று பிற்பகல் 4 மணிக்கு பின்னர் மின்சார துண்டிப்பு இடம் பெறும் என இலங்கை மின்சார பொறியியலாளர் சங்கம் தெரிவித் துள்ளது.
இன்றைய தினத்திற்குள் கனிய எண்ணெய் கூட்டுத்தாபனத்தினால், மின் உற்பத்தி நிலையங்களுக்குத் தேவையான எரிபொருளை வழங்கா விட்டால் பிற்பகல் 4 மணிக்கு பின்னர் மின்சார துண்டிப்பு இடம்பெறும் என இலங்கை மின்சார பொறி யியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
நாட்டில் மின்சார தேவையில் 70 சதவீதமான உற்பத்தி அனல் மின் நிலையங்கள் ஊடாகவே பூர்த்தி செய்யப்படுவதாக அந்த சங்கத்தின் செயலாளர் தம்மிக்க விமலரத்ன தெரிவித்துள்ளார்.
22 சதவீத மின்சாரம் நீர் மின் உற்பத்தி ஊடாக விநியோகிக் கப்படுகின்றது.
சகல மின் உற்பத்தி நிலையங்களும் டீசல் மூலமே இயங்குகின்றன.
களனிதிஸ்ஸயில் உள்ள ஒரு மின் உற்பத்தி நிலையம் மாத்திரம் டீசலுக்கு மேலதிகமாக, நெப்டாவை பயன்படுத்தி இயக்க முடியும்.
நெப்டா தற்போது முழுமையாகத் தீர்ந்துள்ளது.
இன்று மாலை 5 மணி வரை மாத்திரம் மின் உற்பத்தி நிலையங்கள் இயங்குவதற்குத் தேவையான டீசல் கையிருப்பில் உள்ளது.
அதன்பின்னர், 3,000 மெகாவோட் மின்சாரத்தை, வழங்க முடியாத நிலை ஏற்படும்.
இதுவொரு பாரிய பிரச்சினையாகும். அதேநேரம், சப்புகஸ்கந்தை, நிலை யத்திற்கான எரிபொருள் இன்று நண்பகலுடன் தீர்ந்துவிடும்.
இதனால் மேலும் 168 மெகாவோட் மின்சாரத்தை விநியோகிக்க முடியாத நிலை ஏற்படும்.
இதன் காரணமாக பிற்பகல் 4 மணி முதல் இரவு 10 மணிவரை சுமார் ஒன்றரை மணிநேர மின்சார துண்டிப்பை, ஏற்படுத்த நேரிடும் என மின் சார பொறி யியலாளர் சங்கத்தின் செயலாளர் தம்மிக்க விமலரத்ன தெரிவித்தார்.
இதேவேளை, மின்சார பொறியியலாளர்கள் சங்கம் இன்று காலை முதல் சுகவீன விடுமுறை போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பிந்திய செய்திகள்
அம்பாறை அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள சின்னமுகத்துவாரம் பிரதேசத்தில் குடும்ப தகராறு காரணமாக பக்கத்து வீட்டு ஆண் ஒருவரை கோடாரியால் வெட்டிக் கொலை
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தில் ஒரு நாள் சேவை மற்றும் சாதாரண சேவையின் கீழ் கடவுச்சீட்டுக்களைப் பெற்றுக்கொள்ள விண்ணப்பிக்கும் போது முன்
திருகோணமலை, தம்பலகாமம் பகுதியில் இ.போ.ச பேருந்தும் பாரவூர்தியும் மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயரிழந்துள்ளனர்.
சிறிய ரக லொறி ஒன்றும் தனியார் பேருந்தும் மற்றும் முச்சக்கர வண்டியும் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவியேற்றுக் கொண்டார்.
சர்வதேச உதவிகளைப் பெறுவதற்கும், அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கும், வேலையின்மை மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாடு போன்ற பிர
நாடு தற்போது எதிர்கொண்டுள்ள மருந்துப்பொருட்கள் நெருக்கடிக்கு தீர்வுகாணும் வகையில் தேவையான ஒத்துழைப்பை வழங்குவதற்கு உலக சுகாதார அமைப்பு பிரதமர் ரணில
மாலியில் (MINUSMA) ஐக்கிய நாடுகள் அமைதிகாக்கும் பணிக்காக நன்கு பயிற்றுவிக்கப்பட்ட 243 பேர் உள்ளடக்கிய இலங்கை இராணுவ குழுவின் 100 பேரை உள்ளடக்கிய மு
நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் மழையுடனான வானிலை நாளையிலிருந்து சற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.