கணவனை கட்டிவைத்து: சிஐடி எனக்கூறி மனைவியிடம் அபகரிப்பு

Main image
Image

மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேசத்தில் பொலிஸ் சிஜடி என கூறி கடந்த 5 ஆம் திகதி வீடொன்றுக்குள் நுழைந்த கொள்ளையர்கள், அவ்வீட்டிலிருந்து ஆண் ஒருவரை கட்டிவைத்துவிட்டு அவரின் மனைவியிடமிருந்து பெறுமதியான பொருட்களை அபகரித்து சென்றுள்ளனர்.

காதில் இருந்த தோடுகள், தங்க சங்கிலி உட்பட இரண்டரை பவுண் தங்கநகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

அவ்வாறு கொள்ளையில் ஈடுபட்ட 6 பேரை நேற்று (12) புதன்கிழமை கைது செய்துள்ளதுடன் கார் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.

கொள்ளையடிப்பதற்காக, பயன்படுத்திய கோடரி ,கத்தி 3 கையடக்க தொலைபேசிகள் என்பவற்றை மீட்டுள்ளதாக மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பி.எஸ்.பி பண்டார தெரிவித்தார்.

விசாணையில் அவர்கள் வழங்கிய தகவலுடன் மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றையடுத்து சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுகத் மாசிங்கவின் ஆலோசனைக்கமைய மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸ் பரிசோதகர் பி.எஸ்.பி பண்டார தலைமையிலான பொலிஸார் சம்பவதினமான நேற்று புதன்கிழமை ஓட்டுமாவடி, கிரான் பிரதேச செயலக பிரிவிலுள்ள வட்டவான். மற்றும் வெல்லாவெளி பிரதேசத்தைச் சேர்ந்த 4 பேரை கைது செய்தனர்.

பிந்திய செய்திகள்

Main image


அக்கரப்பத்தனையில் ஒரே நாளில் மூன்று கோவில்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

Main image

க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் 'கொவிட்' வைரஸால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள வைத்தியசாலைகளில் பரீட்சை நிலையங்கள

Main image

மரக்கறிகளின் விலை குறைந்துள்ளதாக வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

Main image

ஒமிக்ரோன் பிறழ்வால் நாட்டில் ஐந்தாவது கொரோனா அலை உருவாகும் அபாயம் இருப்பதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) எச்சரித்துள்ளது.

Main image

இலக்கம் 78A, ஒலுவில் வீதி, அட்டாளைச்சேனை-8 எனும் முகவரியில் உள்ள பொறியியலாராக கடமையாற்றி வரும் அப்துல் மனாப் மபாயிஸ் என்பவரது இல்லத்திற்கு செவ்வாய்

Main image

நாட்டில் இன்று பிற்பகல் 4 மணிக்கு பின்னர் மின்சார துண்டிப்பு இடம் பெறும் என இலங்கை மின்சார பொறியியலாளர் சங்கம் தெரிவித் துள்ளது.

Main image

எதிர்காலத்தில் வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கவுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

 

Main image

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Main image

மட்டக்களப்பு வாகரை காயான்கேணி கடலில் மீன் பிடிக்கச் சென்ற தந்தையும் மகனும் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வாகரை பொலிசார் தெரிவித்தனர்.