கிழக்கு மாகாணத்தில் ஆரம்பக் கல்வி ஆசிரியர்களினால் தயாரிக்கப்பட்ட கற்றல் கற்பித்தல் உபகரணக் கண்காட்சி

கிழக்கு மாகாண ஆரம்பக் கல்வி ஆசிரியர்களினால் தயாரிக்கப்பட்ட கற்றல் கற்பித்தல் உபகரணங்களைக் காட்சிப்படுத்தலும் இது தொடர்பான போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வும் மற்றும் வீட்டை அடிப்படையாகக் கொண்ட கற்றல் கையேடு உத்தியோக பூர்வமாக வலயங்களுக்கு கையளிக்கும் நிகழ்வும் 12.01.2022 இல் மட்டக்களப்பு ஆசிரியர் வாண்மை விருத்தி நிலையத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வானது கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் திருமதி. நகுலேஸ்வரி - புள்ளநாயகம் அவர்களின் வழிகாட்டலின் கீழ் கிழக்கு மாகாண ஆரம்பக் கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு.தி.பார்த்தீபன் ஒழுங்கமைப்பில் நடைபெற்றது. இக் கண்காட்சியினை பிரதம அதியாக நிகழ்வில் கலந்து கொண்ட இலங்கைக்கான யுனிசெவ் வதிவிடப் பிரதிநிதி கிறிஸ்டியன் ஸ்கூக் அவர்கள் திறந்து வைத்தார்.
இந் நிகழ்வில் பிரதம அதியாக இலங்கைக்கான யுனிசெவ் வதிவிடப் பிரதிநிதி கிறிஸ்டியன் ஸ்கூக் அவர்களுடன் லூசி மொரிரா டானியல்ஸ், றிபென்ஸியா பற்றர்சன், நிபால் அலாவுதீன், ஆகிய யுனிசெவ் அதிகாரிகளும், கிழக்கு மாகாண மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளர், வலயக் கல்விப் பணிப்பாளர்கள், பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், சேவைக்கால ஆசிரிய ஆலோசகர்கள், ஆசிரியர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வில் கற்றல் - கற்பித்தல் உபகரணங்களை தயாரிக்கும் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற ஆசிரியர்களுக்கான நினைவுச் சின்னங்களும், நற்சான்றிதழும் வழங்கி வைக்கப்பட்டதுடன். வீட்டை அடிப்படையாகக் கொண்ட கற்றல் கையேடு உத்தியோக பூர்வமாக வலயங்களுக்கு கையளிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது. இந் நிகழ்வின் தொழிநுட்பம் மற்றும் நிதியனுசரணையாளராக யுனிசெவ் நிறுவனம் இயங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
பிந்திய செய்திகள்
வவுனியா தேக்கவத்தை பகுதியில் விபச்சார விடுதி ஒன்று பொலிசாரால் இன்று (19) பிற்பகல் முற்றுகையிடப்பட்டதுடன், இரு பெண்கள் உட்பட நான்கு பேர் கைது செய்யப
முஸ்லிம் பெண்கள் அணியும் அபாயாவை அணிந்துகொண்டு, அங்கும் இங்கும் அலைந்து திரிந்து கொண்டிருந்த முஸ்லிம் இளைஞன், கைது செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு செங்கலடி - ரமேஸ்புரம் சித்திரவேலாயுத சுவாமி ஆலய வருடாந்த உற்சவத்தின் பாற்குடபவனி புதன்கிழமை (17) அன்று வெகு விமர்சையாக இடம்பெற்றது.
இலங்கைக்கான அவசர உதவித் தொகையை 75 மில்லியன் அவுஸ்ரேலிய டொலர்களாக அதிகரிக்க அவுஸ்ரேலிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
பொலிஸாரினால் கைதான பிடியாணை பிறப்பிக்கப்பட்ட சந்தேக நபர் வசமிருந்து கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
இணையத்தளம் ஊடாக சிறுவர்கள் பாலியல் ரீதியான தொந்தரவுக்கு உட்படுத்துபவர்கள் தொடர்பிலான தகவல்களை 1929 என்ற இலக்கத்திற்கு வழங்குமாறு கோரப்பட்டுள்ளது.
ஒமிக்ரோன் வைரஸ் திரிபால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு கடுமையான காய்ச்சல் ஏற்படுவதற்கான அபாயம் உள்ளதாக ரிட்ஜ்வே சிறுவர்கள் வைத்தியசாலையின் விசேட வைத
17 வயது சிறுமிகள் இருவரை கடத்திச் சென்றமை மற்றும் தகாத உறவு கொண்டமை என்ற குற்றச்சாட்டுக்களின் கீழ் பேருந்து சாரதிகள் இருவர், நடத்துநர்கள் இருவர் உள
சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக வெளிநாட்டுக்கு செல்ல முயன்ற 10 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.