வாகரை பிரதேச செயலாளராக ஜீ.அருணன் நியமனம்

Main image
Image

கோறளைப்பற்று வடக்கு, வாகரைப் பிரதேச செயலகத்திற்கான புதிய பிரதேச செயலாளராக பொறியியலாளர் ஜீ.அருணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

வாகரைப் பிரதேச செயலகத்தில் கடந்த 01.12.2021 ஆந் திகதி புதன்கிழமை இடம்பெற்ற பிரதேச செயலாளருக்கான வரவேற்பினைத் தொடர்ந்து புதிய பிரதேச செயலாளர் தனத பதவியினை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுள்ளார்.

இதன்போது வாகரை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் புதிய பிரதேச செயலாளரை  மலர் மாலைகள் அணிவித்து வரவேற்பளித்ததுடன் தமது  வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர்.

புதிய பிரதேச செயலாளரை வரவேற்குமுகமாக இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட பிரதேச செயலாளர்  தனது கன்னி உரையின்போது  "கடந்தகால யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டு மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்படும் வாகரைப் பிரதேசத்தினதும், இப்பகுதி மக்களினதும் முன்னேற்றத்திற்காகவும், சுபீட்சமான வாழ்வை ஏற்படுத்தும் பொருட்டும் நேர்மையாக தமது கடமையினை மேற்கொள்வேன் எனவும் அதேபோல் இங்கு கடமை புரியும்  உத்தியோகத்தர்கள்  அனைவரும் இப்பிரதேசத்திற்காக தியாக மனப்பான்மையுடன் ஒத்துழைப்பு வழங்கி சேவையாற்ற வேண்டுமெனவும்  கேட்டுக்கொண்டுள்ளார். 

குறித்த பிரதேச செயலகத்திற்கு புதிதாக பிரதேச செயலாளராக பதவியேற்றுள்ள இலங்கை நிருவாக சேவை அதிகாரியான இவர்  ஏற்கனவே காணி ஆணையாளர் திணைக்களத்தின் உதவிக்காணி ஆணையாளராகவும், பொதுத்திறைசேரியின் தேசிய திட்டமிடல் திணைக்களத்தின் உதவி அத்தியட்சராகவும், கிரான், ஆரையம்பதி, பட்டிப்பளை, மண்முனை வடக்கு ஆகிய பிரதேச செயலகங்களில் உதவிப் பிரதேச செயலாளராக கடமையாற்றியுள்ளதுடன், கிழக்கு மாகாண ஆட்பதிவுத் திணைக்களத்தின் உதவி ஆணையாளராகவும் தனது சிறந்த சேவையினை ஆற்றியுள்ளார்.

padakutv.lkpadakutv.lkpadakutv.lk

 

பிந்திய செய்திகள்

Main image

பெற்றோலிய உற்பத்திகளைக் கொள்வனவு செய்வதற்காக 500 மில்லியன் டொலர் கடனை இந்தியா வழங்கியுள்ளதாக இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்தது.

Main image

பயர்ன் (Bayern) எனப்படும் ​ஜெர்மனியின் போர் கப்பல்,  கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தது.

Main image


அக்கரப்பத்தனையில் ஒரே நாளில் மூன்று கோவில்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

Main image

க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் 'கொவிட்' வைரஸால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள வைத்தியசாலைகளில் பரீட்சை நிலையங்கள

Main image

மரக்கறிகளின் விலை குறைந்துள்ளதாக வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

Main image

ஒமிக்ரோன் பிறழ்வால் நாட்டில் ஐந்தாவது கொரோனா அலை உருவாகும் அபாயம் இருப்பதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) எச்சரித்துள்ளது.

Main image

இலக்கம் 78A, ஒலுவில் வீதி, அட்டாளைச்சேனை-8 எனும் முகவரியில் உள்ள பொறியியலாராக கடமையாற்றி வரும் அப்துல் மனாப் மபாயிஸ் என்பவரது இல்லத்திற்கு செவ்வாய்

Main image

நாட்டில் இன்று பிற்பகல் 4 மணிக்கு பின்னர் மின்சார துண்டிப்பு இடம் பெறும் என இலங்கை மின்சார பொறியியலாளர் சங்கம் தெரிவித் துள்ளது.

Main image

எதிர்காலத்தில் வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கவுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.