கொரோனாவை தடுக்க அமெரிக்க நிறுவனம் தயாரித்துள்ள மாத்திரை

அமெரிக்காவைச் சேர்ந்த மெர்க் நிறுவனம் தயாரித்துள்ள மாத்திரை கொரோனா வைரஸிற்கு எதிராக சிறப்பான செயல்திறனை கொண்டுள்ளது தெரிய வந்துள்ளது.

 இதனை அடுத்து சந்தையில் அந்நிறுவன பங்குகளின் விலை அதிகரித்துள்ளது.
 
மெர்க் நிறுவனம் தயாரித்துள்ள மால்னுபிராவிர் மாத்திரையை உட்கொண்டால் கொரோனா தொற்று பாதிப்பால் மரணம் ஏற்படும் வாய்ப்பு பெருமளவு குறைவதாகவும், மருத்துவமனையில் அனுமதிக்கப்படக் கூடிய நிலை கூட பலருக்கு ஏற்படாது எனவும் தெரியவந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த முடிவுகள் மிகுந்த நம்பிக்கையை அளிப்பதாகவும், இது பயன்பாட்டிற்கு வரும் பட்சத்தில் கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் மிக முக்கிய மைல்கல்லாக இருக்கும் என்றும் அமெரிக்க மருத்துவத்துறை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். 

விரைவில் மெர்க் நிறுவனம் அமெரிக்காவில் இந்த மாத்திரையை அவசரகாலத்தில் பயன்படுத்த அனுமதி கோரி விண்ணபிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
அனுமதி கிடைக்கும் பட்சத்தில் கொரோனா தொற்று பாதிப்பை தடுக்க வாய்வழி உட்கொள்ளும் வகையிலான முதல் மருந்தாக மால்னுபிராவிர் மாத்திரை இருக்கும்.

 மாத்திரையின் ஆய்வக முடிவுகள் நேர்மறையாக இருப்பது தெரியவந்த நிலையில் வெள்ளியன்று சந்தையில் மெர்க் நிறுவனப் பங்குகளின் மதிப்பு 12.3 % அளவு உயர்ந்துள்ளது. அதே நேரத்தில், அதே கொரோனா தடுப்பூசிகளை தயாரித்து வழங்கி வரும்  மொடர்னா பங்குகளின் மதிப்பு 13 % அளவிற்கும், பைசரின் பங்குகள் 1.3 புள்ளி % சரிந்தன.

பிந்திய செய்திகள்

Main image


அக்கரப்பத்தனையில் ஒரே நாளில் மூன்று கோவில்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

Main image

க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் 'கொவிட்' வைரஸால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள வைத்தியசாலைகளில் பரீட்சை நிலையங்கள

Main image

மரக்கறிகளின் விலை குறைந்துள்ளதாக வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

Main image

ஒமிக்ரோன் பிறழ்வால் நாட்டில் ஐந்தாவது கொரோனா அலை உருவாகும் அபாயம் இருப்பதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) எச்சரித்துள்ளது.

Main image

இலக்கம் 78A, ஒலுவில் வீதி, அட்டாளைச்சேனை-8 எனும் முகவரியில் உள்ள பொறியியலாராக கடமையாற்றி வரும் அப்துல் மனாப் மபாயிஸ் என்பவரது இல்லத்திற்கு செவ்வாய்

Main image

நாட்டில் இன்று பிற்பகல் 4 மணிக்கு பின்னர் மின்சார துண்டிப்பு இடம் பெறும் என இலங்கை மின்சார பொறியியலாளர் சங்கம் தெரிவித் துள்ளது.

Main image

எதிர்காலத்தில் வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கவுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

 

Main image

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Main image

மட்டக்களப்பு வாகரை காயான்கேணி கடலில் மீன் பிடிக்கச் சென்ற தந்தையும் மகனும் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வாகரை பொலிசார் தெரிவித்தனர்.