குழந்தைகளுடன் வாவியில் குதித்த பெண் எழுதிய கடிதம்

நேற்று (01) தனது இரண்டு பிள்ளைகளுடன் சந்திரிகா வாவியில் குதித்து தற்கொலை செய்து கொண்ட தாய் எழுதிய கடிதம் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அவரது வீட்டில் சோதனை செய்த பொலிஸ் அதிகாரிகளுக்கு குறித்த கடிதம் கிடைத்தது. குறித்த பெண் சில காலமாக மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாகவும், மருந்தை உட்கொள்வதற்கு உடலுக்கு மிகவும் சிரமமாக இருந்ததால் தற்கொலை செய்து கொள்ள தீர்மானித்ததாகவும் குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
32 வயதான தாய் தனது 5 வயது மற்றும் 11 வயது குழந்தைகளுடன் சந்திரிகா வாவியில் நேற்று குதித்திருந்தார். சம்பவத்தில் 5 வயது குழந்தையும் உயிரிழந்துள்ளதுடன், 11 வயது குழந்தை உயிர் பிழைத்துள்ளது. உயிரிழந்த பெண்ணிடம் இருந்து 2000 ரூபா பணம் மற்றும் கையடக்கத் தொலைபேசி என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. சுரங்கிகா மதுமாலி என்ற 32 வயதுடைய தாய் நேற்று (01) பிற்பகல் தனது இரண்டு குழந்தைகளுடன் சந்திரிகா வாவியில் குதித்துள்ள நிலையில் 11 வயதுடைய சாம் துஷ்மந்த நீந்திக் கரைக்கு வந்து உதவி கோரி சத்தமிட்டுள்ளார். அதன்படி பிரதேசவாசிகள் மற்றும் எம்பிலிபிட்டிய பொலிஸ் உயிர்காப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து தாயை காப்பாற்ற முயற்சித்துள்ளனர்.
தாய் மற்றும் 5 வயதுடைய நெதும் நெத்மால் ஆகிய இருவரும் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் 5 வயது குழந்தை மதியம் 1.45 மணியளவில் உயிரிழந்துள்ளது. எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்த தாய் நேற்று மாலை உயிரிழந்திருந்தார்.
பிந்திய செய்திகள்
வவுனியா தேக்கவத்தை பகுதியில் விபச்சார விடுதி ஒன்று பொலிசாரால் இன்று (19) பிற்பகல் முற்றுகையிடப்பட்டதுடன், இரு பெண்கள் உட்பட நான்கு பேர் கைது செய்யப
முஸ்லிம் பெண்கள் அணியும் அபாயாவை அணிந்துகொண்டு, அங்கும் இங்கும் அலைந்து திரிந்து கொண்டிருந்த முஸ்லிம் இளைஞன், கைது செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு செங்கலடி - ரமேஸ்புரம் சித்திரவேலாயுத சுவாமி ஆலய வருடாந்த உற்சவத்தின் பாற்குடபவனி புதன்கிழமை (17) அன்று வெகு விமர்சையாக இடம்பெற்றது.
இலங்கைக்கான அவசர உதவித் தொகையை 75 மில்லியன் அவுஸ்ரேலிய டொலர்களாக அதிகரிக்க அவுஸ்ரேலிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
பொலிஸாரினால் கைதான பிடியாணை பிறப்பிக்கப்பட்ட சந்தேக நபர் வசமிருந்து கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
இணையத்தளம் ஊடாக சிறுவர்கள் பாலியல் ரீதியான தொந்தரவுக்கு உட்படுத்துபவர்கள் தொடர்பிலான தகவல்களை 1929 என்ற இலக்கத்திற்கு வழங்குமாறு கோரப்பட்டுள்ளது.
ஒமிக்ரோன் வைரஸ் திரிபால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு கடுமையான காய்ச்சல் ஏற்படுவதற்கான அபாயம் உள்ளதாக ரிட்ஜ்வே சிறுவர்கள் வைத்தியசாலையின் விசேட வைத
17 வயது சிறுமிகள் இருவரை கடத்திச் சென்றமை மற்றும் தகாத உறவு கொண்டமை என்ற குற்றச்சாட்டுக்களின் கீழ் பேருந்து சாரதிகள் இருவர், நடத்துநர்கள் இருவர் உள
சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக வெளிநாட்டுக்கு செல்ல முயன்ற 10 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.