ஊர்காவற்துறை கடலில் இருந்து குடும்பஸ்தரின் சடலம் மீட்பு

ஊர்காவற்துறை கடலில் இருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த குடும்பஸ்தர் தனது கடற்றொழில் உபகரணங்களை சரிசெய்த பின்னர் கடலுக்கு செல்ல முற்பட்ட வேளையே உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. குறித்த நபர் மரணித்த பின்னர் இன்னொரு மீனவர் அவ்விடத்திற்கு வந்து அவரது சடலத்தினை கண்டுள்ளார். இந்நிகழ்வில் ஊர்காவற்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. அதனடிப்படையில் அவரது சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. ஐஸ் பழ வீதி, குருநகரை சேர்ந்த திரகரி நைனாஸ் (வயது 57) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பிந்திய செய்திகள்
வவுனியா தேக்கவத்தை பகுதியில் விபச்சார விடுதி ஒன்று பொலிசாரால் இன்று (19) பிற்பகல் முற்றுகையிடப்பட்டதுடன், இரு பெண்கள் உட்பட நான்கு பேர் கைது செய்யப
முஸ்லிம் பெண்கள் அணியும் அபாயாவை அணிந்துகொண்டு, அங்கும் இங்கும் அலைந்து திரிந்து கொண்டிருந்த முஸ்லிம் இளைஞன், கைது செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு செங்கலடி - ரமேஸ்புரம் சித்திரவேலாயுத சுவாமி ஆலய வருடாந்த உற்சவத்தின் பாற்குடபவனி புதன்கிழமை (17) அன்று வெகு விமர்சையாக இடம்பெற்றது.
இலங்கைக்கான அவசர உதவித் தொகையை 75 மில்லியன் அவுஸ்ரேலிய டொலர்களாக அதிகரிக்க அவுஸ்ரேலிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
பொலிஸாரினால் கைதான பிடியாணை பிறப்பிக்கப்பட்ட சந்தேக நபர் வசமிருந்து கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
இணையத்தளம் ஊடாக சிறுவர்கள் பாலியல் ரீதியான தொந்தரவுக்கு உட்படுத்துபவர்கள் தொடர்பிலான தகவல்களை 1929 என்ற இலக்கத்திற்கு வழங்குமாறு கோரப்பட்டுள்ளது.
ஒமிக்ரோன் வைரஸ் திரிபால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு கடுமையான காய்ச்சல் ஏற்படுவதற்கான அபாயம் உள்ளதாக ரிட்ஜ்வே சிறுவர்கள் வைத்தியசாலையின் விசேட வைத
17 வயது சிறுமிகள் இருவரை கடத்திச் சென்றமை மற்றும் தகாத உறவு கொண்டமை என்ற குற்றச்சாட்டுக்களின் கீழ் பேருந்து சாரதிகள் இருவர், நடத்துநர்கள் இருவர் உள
சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக வெளிநாட்டுக்கு செல்ல முயன்ற 10 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.