புளுக்குணாவி குளநீரைநம்பிய சிறுபோக விவசாயிகளுக்கு அம்பாரை மாவட்டத்தில் இருந்து நீர் கடனாககோரப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறுபோக விவசாயிகள் புளுக்குணாவி குளத்து நீரைநம்பி விசாயத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் கவனத்திற்கு கொண்டு சென்றிருந்தனர். இவ்விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுக்கும்படி தலைவர் பணித்தன்பேரில் எமது செயலாளர் உடனடியாக புளுக்குணாவ குளத்தின் நீர் மட்டத்தினை பார்வையிட்டதுடன் உரிய அதிகாரிகளின் கவனத்திற்கும் கொண்டு சென்றிருந்தார்.
எமது கட்சியின் செயலாளர் மற்றும் அரசாங்க அதிபரின் தீவிரமுயற்சியினால் அயல் மாவட்டமான அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரிடம் உரையாடியதைத்தொடர்ந்து சேனநாயக சமூத்திரத்தில் இருந்து நீர் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புளுக்குணாவி குளத்து நீரைநம்பி விசாயம் செய்கை பண்ணப்படவேண்டிய இரண்டாயிரத்திதொலாயிரத்தி என்பது (2980) ஏக்ருக்கான அனுமதிமாத்திரம் வழங்கப்பட்ட நிலையில் சட்டவிரோதமாக ஜநூறு (500) ஏக்கர்களை மேலதிகமாக செய்கை பண்ணப்பட்டதினால் குளத்தில் தேக்கிவைக்கப்பட்டுள்ள நீர் போதுமானதாக இல்லாத காரனத்தினால் மாவட்டத்தில் உள்ள நவகிரி குளத்து நீரை பாவிப்பதுதொடர்பாக மத்திய நீர்ப்பாச நிணைக்களத்துடன் உரையாடியபோது பிரதிப்பணிப்பாளர் எம்.வி.எம்.அசார் நவகிரி கன்ட விவசாயிகளுக்கு போதுமான நீர்மாத்திரம் தங்களிடம் உள்ளதினால் புளுக்குணாவி விவசாயிகளுக்கு வழங்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் தடவையாக நீர் கடன்பெற்று விவசாயிகளின் விளைநிங்களை காப்பாற்றப்பட்டுள்ளது. வரலாற்றில் என்றும் நடைபெறாத ஒரு திட்டத்தினை எம்மக்களுக்காக செயல்வடிவம் பெறவுள்ளமை சிறப்புக்குறிய விடையமாகும். அந்தவகையில் அம்பாறை சேனநாயக்க சமூத்திரத்தில் இருந்து நவகிரிக்கும் அங்கிருந்து ஆற்றுப்பாச்சல் ஊடாக 47ம் 49ம் 51ம் 52ம் மற்றும் கடுக்காமுனை 3ம் 4ம் வாய்கால் மூலம் புளுக்குணாவிக்கு நீர் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பட்டிருப்பு நிர்ப்பாசன பொறியலாளர் எஸ்.சுபாகரன் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்தில் சேனநாயக்க சமுத்திரத்திணை புனரமைக்கப்படும் போது 1956ம் ஆண்டு ஒப்பந்தம் ஒன்று கைச்சாதான உடண்படிக்கையின் பிரகாரம் மட்டக்களப்பு நவகிரிக்கு நீர்தேவை ஏற்ப்படும் போது மட்டக்களப்பு மாவட்டத்திற்கு நீர் வழங்குவதாக ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது அதனை இம்முறைதான் 1956ம் ஆண்டுக்குப்பிறகு நடைமுறைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.

இதற்காக பாடுபட்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் பூ.பிரசாந்தன், அரச அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா, மற்றும் நீர்ப்பாசணப் பொறியியலாளர் எஸ்.சுபாகரன், அதிகாரிகள் அனைவருக்கும் விவசாயிகள் நன்றியைத் தெரிவித்துள்ளனர்.

இவ்விடயம் தொடர்பில் 05.05.2020  வெல்லாவெளி பிரதேச செயலகத்தில் நடைபெற்ற விசேடகூட்டத்தில் அரசாங்க அதிபர் மத்திய பிரதி நீர்ப்பாசன பிரதிப்பணிப்பாளர் மாகாண பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் வி.இராஜகோபாலசிங்கம் மற்றும் வெல்லாவெளி பிரதேச செயலாளர் ஆர்.ராகுலநாயகி பட்டிப்பளை பிரதேச செயலாளர் டி.தட்~னகௌரி நவகிரி பிரதேச நீர்பாசன பொறியலாளர் எம்.பத்மதாசன் விவசாயிகள் என பலரும் கலந்துகொன்டனர்.    

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இதையும் பாருங்கள்